நடைபாதையில் கொட்டப்பட்ட ஆவின் பால். நிர்வாக சீர்கேடு காரணமா?
மாதாந்திர அட்டை மூலம் #ஆவின் பால் வாங்கிட முன் பணம் செலுத்திய மக்களுக்கு வழங்குவதற்காக ஒப்பந்த வாகனங்களில் 12லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டப்புகள் மூலம் சம்பந்தப்பட்ட பூத்துகளுக்கு தினசரி அதிகாலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் சம்பந்தப்பட்ட பூத்துகளில் பணியமர்த்தப்பட்டு பாலினை விநியோகம் செய்யும் வேலையை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு பணியில் இருக்கும் ஊழியர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நுகர்வோர் பாலினை வாங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பூத்துகளில் ஒப்பந்த வாகனங்கள் மூலம் இறக்கப்பட்ட ஆவின் பாலினை ஒரு மணி நேரத்திற்குள் காலி செய்து விட வேண்டும் இல்லையேல் வாகன ஓட்டிகள் தயவுதாட்சண்யம் பாராமல் நடைபாதையிலேயே கொட்டி விட்டு சென்று விடுவர் இந்த நிர்வாக சீர்கேடுக்கு #ஆவின் நிறுவனத்திம் பொறுப்பேற்குமா?
ஆவின் பூத்துகளில் பால் விநியோகம் செய்யப்படுவதை முறையாக கண்காணிக்காமலும், பால் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்புகளை பற்றாக்குறையோடு வைத்துக் கொண்டு பெயரளவில் நித்தமும் வெற்று அறிக்கைகளை மட்டுமே ஆவின் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.