ஆசையா வாங்கின லவ் பேர்ட்ஸ் முட்டை வைக்கலயா? நீங்க தெரிஞ்சுக்க நிறைய இருக்கு.
இந்த காதல் பறவைகளுக்கு அன்பையும், பாதுகாப்புணர்வையும் நாம கொடுத்தா போதும். கையில், தோளில் ஏறி சவாரி போகும்.
சின்ன குழந்தை அடம் பிடிப்பது போல அவற்றோடு விளையாட சொல்லி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
எதுவும் மிகைப்படுத்தி சொல்லலை. லவ் பேர்ட்ஸ் வாங்கி வளர்க்க ஆசைப்பட்டா முதல்ல அதைப்பற்றி வளர்த்து அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு நன்கு தெரிந்து கொண்டு பின் வாங்கி வளர்க்கணும்.
வாங்கி வீட்டுக்கு பொண்டு வந்ததும் முதல்ல அதற்கு தேவையான தினை, தண்ணீர் வைத்து பின் மெல்லிய துணியால் கூண்டை மூடி அமைதியான சூழலில் விட்டுடணும்.
அதிர்ச்சி தரும் ஒலிகளை தவிர்க்க வேண்டும்.
அடுத்து அவற்றை தொடாமல் அதன் முன்பாக உட்கார்ந்து மென்மையான குரலில் பேசலாம். அது கவனிக்க தொடங்கும். அதற்கு முழுமையாக நம்பிக்கையையும், பாதுகாப்பான சூழலில் இருக்கும் உணர்வையும் தந்துவிட்டால் போதும். முட்டையிட தொடங்கி விடும்.